இந்த புதிய ஆண்டில் இலங்கை மக்களால் தவிர்க்க முடியாத நெருக்கடி நிலை
எதிர்வரும் புத்தாண்டில் உணவு தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
உர நெருக்கடியால் விவசாயிகள் இன்றளவும் தவித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக பாரிய அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தைக்கு வரும் உணவு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மரக்கறி முதற்கொண்டு அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியன, இலங்கை ஒரு மிகப் பெரிய பஞ்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிறந்திருக்கும் இந்த புது வருடத்திலும் கூட பால்மா, சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களுக்கான விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
