சபையில் தனது கைது குறித்து பேச மறுத்த நாமல்.. வெளியான காரணம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விடயம் குறித்து பேசுவது நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்பதால், நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது தனது அண்மைய கைது குறித்து பேசுவதைத் தவா்த்துக் கொண்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்தார்.
நாடாளுமன்ற நடைமுறை
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மதுகொட, நாடாளுமன்றத்தை குண்டுவைத்து தகர்க்கவும், வளாகத்திற்கு தீ வைக்கவும் முயன்ற வரலாற்றைக் கொண்ட சில அரசாங்க உறுப்பினர்களைப் போல் அல்லாமல், நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை நன்கு அறிந்தவர் என குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்தும் நீதித்துறையின் நடத்தை குறித்தும் பேசுவார் என எதிர்பார்த்ததாக தெரிவித்த நீதித்துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விடயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இது குறித்து கருத்துத் தெரிவிக்காமல் தவிர்த்ததன் மூலம் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற நடைமுறைக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக மதுகொட மேலும் தெரிவித்தார்.
YOU MAY LIKE THIS..