கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் தொடர்பில் நாமல் கவலை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து (SLPP) சென்று ஜனாதிபதி ரணிலுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளித்தவர்கள் தொடர்பில் எமக்கு மனக்கசப்பு எதுவும் இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். யாராக இருந்தாலும் எந்த நேரத்திலும் கட்சியிலிருந்து வெளியேற முடியும். எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்ளவும் முடியும்.
பிரதான பொறுப்பு
எனினும், எங்களின் முகாமை காட்டிக் கொடுத்தது தொடர்பில் இன்னும் எங்களுக்குக் கவலை இருக்கின்றது. இருந்தபோதும், மனக்கசப்பு எதுவும் இல்லை.
இந்த நாடு பொருளாதார, சமூக ரீதியாக விருத்தியடைந்திருந்த காலப்பகுதி என்றால்
அது மகிந்த ராஜபக்சவின் யுகமாகும். எனவே, மகிந்த ராஜபக்ச இடையில் விட்டுச்
சென்ற இடத்திலிருந்து முன்னோக்கி கொண்டுச் செல்வதே எனது பிரதான
பொறுப்பாகும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam
