ஜனாதிபதி வேட்பாளர் நாமலின் பின்னணியில் இந்தியா
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய அரசாங்கம் ஆதரவு தெரிவிப்பதாக, முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ராஜபக்ச குடும்பம் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் குடும்பம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
மகிந்த அரசாங்கம்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை மகிந்த அரசாங்கம் வெற்றி கொண்டதை இந்திய பெருமையுடன் வரவேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழிழனத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.