அரகலய போராட்டத்தின் பின்னணியில் ரணிலுக்கும் தொடர்பு: நாமல் பகிரங்கம்
அரகலய போராட்டத்தை நிர்மாணித்தவர்களில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவும் ஒருவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“சிஸ்டம் ச்சேஞ்ச்” என்ற முறைமை மாற்றத்தைக் கோரி போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நாமல்,
ரணில் விக்ரமசிங்க
“அரகலயவில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள்.
அவரது செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அவரும் அரகலய போராட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனவே நிரூபணமாகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்காகச் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் இருக்கின்றன
அவற்றை நடைமுறைப்படுத்துவதாற்கான திட்டமிடல்கள் எம்மிடம் உள்ளன.” என நாமல் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
