ஜவஹர்லால் நேருவைப் போல மாற நினைக்கும் நாமல்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மகிந்தவுக்கான சிறைக் கடிதம்

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lankan Peoples Sri Lanka Government
By Benat Nov 19, 2026 07:29 AM GMT
Report

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள் மற்றும் மோசமான அரசியல் முடிவுகள் குறித்துதான், நாமல் ராஜபக்ச முதலில் தனது தந்தையிடம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் என்று ஜனபலய அமைச்சர் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர தெரிவித்துள்ளார். 

நாமல் ராஜபக்ச,  ஜவஹர்லால் நேருவைப் போலவும்,  விஜய குமாரதுங்கவைப் போலவும் உருக்கமாக கடிதம் எழுத முயற்சித்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்ச தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நாமல் கேட்க வேண்டிய கேள்விகள் 

தான் சிறையில் இருப்பதால் தந்தையுடன் நேரடியாக இணைந்து அவரது பிறந்தநாளைக் கொண்டாட முடியவில்லை என்றும், தந்தையிடம் இருந்து பெற்ற உத்வேகத்தின் அடிப்படையில் இந்தச் சவால்களை எதிர்கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையுடன் இணைந்து பிறந்தநாளைக்  கொண்டாட முடியாதது குறித்து தனது வருத்தத்தையும் அவர்  வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கடிதத்தைப் பார்க்கும் போது, ஜவஹர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதங்களும், விஜய குமாரதுங்க சிறையில் இருந்தபோது தனது மகளுக்கு எழுதிய கடிதமும் நினைவுக்கு வருகின்றது.

அவற்றைப் போன்றதொரு உணர்வுபூர்வமான கடிதத்தை எழுதுவதற்கு நாமல் ராஜபக்ச முயற்சி செய்துள்ளார். ஆனால், நாமல் ராஜபக்ச தனது தந்தையிடம் கேட்க வேண்டிய கேள்வி இதுவல்ல.

ஜவஹர்லால் நேருவைப் போல மாற நினைக்கும் நாமல்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மகிந்தவுக்கான சிறைக் கடிதம் | Namal Faces Fresh Questions Over Corruption

தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாகவே அவர் தந்தையிடம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.

அதிகார பலத்தைக் காட்டி ஊழல் நிறைந்த அரசியல் முறையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கி, என்னையும் அந்த ஊழல் அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாற்றியது ஏன் அப்பா? என்ற கேள்வியையே அவர் எழுப்பியிருக்க வேண்டும்.

சிறு வயதில் திருட்டில் ஈடுபடும் ஒரு குழந்தையை  தாய் தொடர்ந்து ஆதரித்து, அந்தச் செயலைத் தவறு என்று சுட்டிக்காட்டாமல் விட்டால், அந்தக் குழந்தை பின்னாளில் பெரிய குற்றவாளியாக மாறக் கூடும் என்ற கதையொன்று உள்ளது.

அந்தக் கதையில், சிறுவயதில் திருடிய பொருளைத் தாய் அங்கீகரித்ததால் தான் பின்னாளில் தான் குற்றவாளியாக மாறியதாக அந்தக் குழந்தை கூறுகின்றது. அதுபோன்று தான், நாமல் ராஜபக்சவும் தனது தந்தையிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் விமானக் கொள்வனவு உள்ளிட்ட பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் பாரிய மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜவஹர்லால் நேருவைப் போல மாற நினைக்கும் நாமல்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மகிந்தவுக்கான சிறைக் கடிதம் | Namal Faces Fresh Questions Over Corruption

குறிப்பாக, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மற்றும் கிரிஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில வழக்குகள் மூவரடங்கிய விசேட நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாமல் ராபக்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய நபர்களுககும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகள் தொடர்பில் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.

ஆனால், ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்கள் உணர்ச்சிபூர்வமான கடிதங்களை எழுதி மக்களின் கவனத்தை  திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.

தந்தை - மகன் பாசத்தை முன்னிறுத்தி மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கு முயற்சிப்பதைவிட, நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதே முக்கியமானதாகும்.

ஒரு தந்தை தனது பிள்ளையை உண்மையாக நேசித்திருந்தால், இவ்வாறான ஊழல் நிறைந்த அரசியல் முறையை நாட்டில் உருவாக்கியிருக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளார். 

தாயை சிறைக்கு அனுப்பி வைத்த விமலின் மகள் : சாதாரண கைதிகளுடன் அடைக்கப்பட்ட சஷி

தாயை சிறைக்கு அனுப்பி வைத்த விமலின் மகள் : சாதாரண கைதிகளுடன் அடைக்கப்பட்ட சஷி

15 நாட்களுக்கு பணம் இன்றி துயரமடையும் அரச ஊழியர்கள்! தீர்வில்லை என குற்றச்சாட்டு

15 நாட்களுக்கு பணம் இன்றி துயரமடையும் அரச ஊழியர்கள்! தீர்வில்லை என குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US