வடக்கு இளைஞர்களை கைது செய்ய மட்டுமே பயங்கரவாத தடை சட்டம்! நாமல் விசனம்
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாதாள உலகக் கும்பலை கைது செய்ய பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
வடக்கு மற்றும் தெற்கில் முகநூல் பதிவுகளுக்காக கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தை அரசாங்கம் பிரயோகித்ததாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள்
இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடை சட்டத்தை இல்லாமல் செய்யும் என்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு வாக்களித்ததாக சுட்டிக்காட்டிய நாமல், அரசாங்கம் அவர்களை ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய கட்சி பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டங்களை ஆதரிப்பதாகவும் நாங்கள் அதில் வெளிப்படையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மற்றவர்களை போல நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri

கும்பமேளாவுக்கு கணவரால் வர முடியாததால்.., Video call செய்து தண்ணீரில் போனை முக்கி எடுத்த மனைவி News Lankasri
