முக்கிய நிகழ்வில் மீண்டும் இணைந்த ரணில் - ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உமந்தாவ பௌத்த உலகளாவிய கிராமத்தில் நடைபெற்ற புண்ணிய நிகழ்வுகள் தொடரில் ஒன்றாக பங்கேற்றுள்ளனர்.
குறித்த புண்ணிய நிகழ்வு நேற்று(25.02.2025) நடைபெற்றுள்ளது.
சமந்தபத்ர தேரரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு உமந்தாவ பௌத்த உலக கிராமத்தில் இந்த புண்ணிய நிகழ்வுகள் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மிகப்பெரிய சுரங்க விகாரை
மகா சங்கரத்தினத்திற்கு சங்கத்திற்கான தானம் வழங்கப்பட்டதுடன், அந்த நிகழ்வில் தாம் பங்கேற்றதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முகப்புத்தக கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில் குறிப்பிட்டதாவது,
“ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க விகாரையின் மேல் அமைந்துள்ள, சில வாரங்களுக்கு முன்னர் புதிதாக திறக்கப்பட்ட நமது நாட்டின் மிகப்பெரிய படுத்திருக்கும் புத்த சிலையை மிகுந்த பக்தியுடன் வணங்கி பூஜித்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்பலரும் பங்கேற்றிருந்ததாக அந்த முகப்புத்தக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
