நாமலுக்காக ரணிலுடன் மேற்கொள்ளப்பட்ட இரகிய ஒப்பந்தம்.. அம்பலப்படுத்தும் அரசாங்கம்!
நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு, தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்பட்டது அல்ல என்றும், அது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்டது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெளிவுபடுத்தினார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த வழக்கு தொடங்கப்பட்டது என்பதை வலியுறுத்திக் கூறினார்.
ரணில் ஆட்சிக்காலம்
"இது நாங்கள் தொடர்ந்த வழக்கு அல்ல. இது முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தொடரப்பட்டது.

அவர் இதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது," என்று ஹேரத் கூறினார். முந்தைய அரசாங்கம் இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளையோ மேற்கொள்ளத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், இதனை "அவர்களுக்கு இடையிலான ஒரு உடன்பாடு" என்றும் வர்ணித்தார்.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதும், இதற்கு முன் கவனிக்கப்படாமல் இருந்த அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கான தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening