12ஆம் திகதி லிமினி கலந்து கொண்டால் அரசியலில் ஏற்படப்போகும் அதிரடி திருப்பம்..! திடீரென சிஐடிக்கு முக்கிய முறைப்பாடு

CID - Sri Lanka Police Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Mayuri Sep 08, 2026 11:38 AM GMT
Report

எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி ராஜபக்‌ச மற்றும் அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் தொடர்ச்சியாக அநாகரிகமான அவதூறுப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்து அதற்கு எதிராக கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (08) சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தல்கள் குறித்து முறைப்பாடு

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே நாமல் ராஜபக்‌ச ரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்தோம். தற்போது அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பதை எதிர்பார்த்துள்ளோம்.

12ஆம் திகதி லிமினி கலந்து கொண்டால் அரசியலில் ஏற்படப்போகும் அதிரடி திருப்பம்..! திடீரென சிஐடிக்கு முக்கிய முறைப்பாடு | Namal Rajapaksa S Wife Files Complaint

தேசிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் நாமல் ராஜபக்‌ச இல்லாத குறையை நிவர்த்தி செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச, ஷிரந்தி ராஜபக்‌ச, கோட்டாபய ராஜபக்‌ச, நாமல் ராஜபக்‌சவின் சகோதரர்கள் மற்றும் நாமல் ராஜபக்‌சவின் மனைவியான லிமினி ராஜபக்‌ச உள்ளிட்ட பலரை களமிறக்குமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

குறிப்பாக நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்குங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து வலுவாக எழுகிறது. கடந்த காலங்களில் நாமல் ராஜபக்‌சவுடன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது அவரது ஆளுமை, மொழிவளம் மற்றும் வணிக அறிவு என்பவற்றை மக்கள் அவதானித்த காரணத்தினாலேயே இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அவதூறு பரப்பல்

ஒரு நாட்டின் தலைவரின் மனைவி மக்கள் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆளுமையும் திறமையும் அவரிடம் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல் கும்பல், எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளது.

12ஆம் திகதி லிமினி கலந்து கொண்டால் அரசியலில் ஏற்படப்போகும் அதிரடி திருப்பம்..! திடீரென சிஐடிக்கு முக்கிய முறைப்பாடு | Namal Rajapaksa S Wife Files Complaint

குறிப்பாக, அவரது தந்தை திலக் வீரசிங்க மற்றும் அவரது வியாபாரங்களை இலக்கு வைத்து பாரிய அசத்திய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். திலக் வீரசிங்க என்பவர் திறமையான, நேர்மையான, குணநலன் மிக்க, நாட்டிற்குப் புகழைத் தேடிக்கொடுத்த ஒரு வர்த்தகர் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

நாட்டின் தலைவர்களின் குடும்பங்களை இலக்கு வைத்து இவ்வாறு சேறுபூசும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளோம். பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய அவதூறுகளையும் இழிவான செயற்பாடுகளையும் தடுப்பதற்கான அவசியமான சட்டத் திருத்தங்கள் நாமல் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கட்டாயம் கொண்டுவரப்படும் என்றார்.

பாரிய ஊழல் மோசடியில் சிக்கப்போகும் பிரபல பெண் அரசியல்வாதி

பாரிய ஊழல் மோசடியில் சிக்கப்போகும் பிரபல பெண் அரசியல்வாதி

பழைய சம்பவங்களுக்கு வழக்குத் தொடரக் கூடாதாம்! நாமல் கைது தொடர்பில் ரணில் தரப்பின் வியாக்கியானம்

பழைய சம்பவங்களுக்கு வழக்குத் தொடரக் கூடாதாம்! நாமல் கைது தொடர்பில் ரணில் தரப்பின் வியாக்கியானம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US