இலங்கையர்களை ஏமாற்றும் மோசடியின் பின்னணியில் நாமல் - வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் தடைசெய்யப்பட்ட மூன்று பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்யுமாறு மத்திய வங்கி, சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் அந்த 3 திட்டங்களுக்கு ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதென தகவல்கள் வெளியாகி உள்ளன.
OnmaxDT என்ற இலங்கையில் மிகவும் பிரபலமான பிரமிட் திட்டமே நாமலுக்கு சொந்தமானதென கூறப்படுகின்றது.
OnmaxDT என்பது அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள ஒரு நிறுவனம் என விளம்பரப்படுத்தப்படுகின்றது. எனினும் இந்த நிறுவனத்துக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்பு இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், கிரிப்டோ மைனிங்கிற்கும் பிட்காயின் பரிவர்த்தனைகளை நடத்தும் OnmaxDT என்ற நிறுவனத்திற்கும் நாமல் ராஜபக்சவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என அவரது ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்தத் திட்டத்தின் மூலம் நாடாளவிய ரீதியில் பலர் தமது பணத்தினை முதலீடு செய்துள்ளனர். மலையகத்தை சேர்ந்தவர்களில் இதில் அதிகம் ஈடுபட்டுள்ளதாக அண்மைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
