நாமலை விடுவிக்க சர்வதேசத்தின் அழுத்தமா..! ஜெனிவாவில் நாமலுக்காக ஒலித்த குரல்
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், ராஜபக்ச ஆதரவாளரான மிலிந்த ராஜபக்ச என்பவர் நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக ஐநா சபைக்கு சென்று உரையாற்றியுள்ளார்.
கடந்த காலங்களில், ஈழத் தமிழர் விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் (ஐநா சபை) இலங்கையை விமர்சித்தபோது, ராஜபக்ச குடும்பத்தினர் அந்த அமைப்புகளைத் தாழ்வாகப் பேசி வந்தனர்.
ஆனால் தற்போது, நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக அதே ஐநா சபையை அவர்கள் நாடியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
ஒரு அரசியல்வாதியின் கைதுக்காக சர்வதேச மட்டத்தில் இவ்வளவு தூரம் சென்று குரல் கொடுப்பது, பொதுவான நீதிக்காக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே நடப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
ஜெனீவாவில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது, வெறும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான காலமே பேசும் வாய்ப்பைப் பெற்றதாகவும் அல்லது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு மேலோட்டமான செயலாக பார்க்கப்படுகின்றது.
இந்தவிடயங்கள் பற்றி கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..