நாமலுக்கு வழங்கப்பட்ட உயர் பதவி - அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூட்டம் கட்சியின் தலைமையகத்திலோ அல்லது வேறு எந்த பொது இடத்திலோ நடைபெறாமல் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இடம்பெற்றுள்ளது.
அங்கு இடம்பெற்றமைக்கான காரணம் குறித்த உண்மைகள் வெளியாகியுள்ளதாக தென்னிலங்கை அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபாக்சர்கள் மோதல்
பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர், நாமல் ராஜபக்சவுடன் மோதல் உச்சகட்டத்தை எட்டியதால், மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.
எனினும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்ட குழுவினர் கடுமையாக வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.
ஒழுக்காற்று குழு
எனினும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு பசில் ராஜபக்ஷ அதனை நிராகரித்துள்ளார். கட்சியின் ஒழுக்காற்று குழு மற்றும் மோதலைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் அவரது அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரையும் வெற்றி கொள்வதற்காக பத்து பல சேனா என்ற பிரச்சார திட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ச புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.