நல்லூர் பிரதேச சபை தவிசாளராக மயூரன் தெரிவு: ஈ.பி.டி.பி வெளிநடப்பு
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் ஏக மனதாக ணதெரிவாகியுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றது.
அதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ப.மயூரன் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வேறு யாரும் போட்டியிடாதமையால் மயூரன் தவிசாளராக ஏக மனதாக தெரிவாகியுள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி
அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தவிசாளர் தெரிவில் சபையில் இருக்கவில்லை என சபையில் இருந்து வெளியேறியிருந்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியும், தமிழரசு கட்சியும் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிணை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. உப தவிசாளராக ஜெயகரனும் தெரிவாகியுள்ளார்.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam