தங்க தேர் பவணியில் நல்லூர் கந்தன்(live)
இலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு நிறைந்த ஆலயம் தான் நல்லூர் கந்தசுவாமி ஆலயம். இந்த ஆலயத்தில் தற்போது மகோற்சவ திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன்படி (21.08.2023) நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி தீர்த்த திருவிழாவுடன் 25 நாட்களுக்கு தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நல்லூரானின் மகோற்சவ பெருவிழா தற்போது நடந்துக் கொண்டிருக்கின்ற வேளையில், இன்றைய தினம் 21ஆவது நாள் மாலை பூஜையான வேல்விமான உற்சவம் நடைபெறுவதை நேரலையாக காணலாம்.
மேலும், நல்லூரானின் மகோற்சவ பெருவிழாவில் இன்று காலை பூஜையான கஜவல்லி மஹாவல்லி உற்சவம் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
செய்தி - தீபன்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆவது நாள் தங்கரத திருவிழா இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.
முருகப்பெருமான் வள்ளி தெய்வாணை சகிதம் தங்க ரதத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் வழங்கினர்.
இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்வரும் 12ம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும் 13ம் திகதி காலை
தேர்த்திருவிழாவும் 14ம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.


















