அகிலம் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 8ஆம் நாள் சிறப்பு பூஜைகள் (Video)
அகில உலக நாயகனாக போற்றப்படும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அன்றிலிருந்து பல்வேறான சிறப்பு ஆலய உற்சவங்கள் நடைபெறு வருகின்றன.
யாழ்.நல்லூரில் காட்சியளிக்கும் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மகோற்சவ பெருவிழாவின் 8ஆம் நாள் இன்றாகும்.
நல்லூர் முருகப்பெருமானின் மகோற்சவ தரிசனம் காண உள்நாட்டில் மட்டும் அல்லது வெளிநாட்டில் இருந்தும் ஆயிரமாயிரம் பக்தர்கள் வருடாவருடம் வருகைதட்டுவது வழக்கமாகும்.
அந்த வகையில் இன்றைய தினம் நல்லூரானுக்கு 8 ஆம் நாள் பூஜை இடம்பெறுகிறது. இன்றைய காலை பூஜையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மலர்மாலை பூஜையுடன் சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளது.
மேலும் முருகப்பெருமான் தங்க மயில் வாகனதிலும் வள்ளி தெய்வானை வெள்ளி அண்ண வாகனத்திலும் உள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.
அதன் பின் சிறப்பு பூஜைகளுடன் கந்தனுக்கு தோத்திர பாடல்கள் பாடி மேல வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளது.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
