நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவம் இன்று (Live)
மேன்மை கொள் சைவ நீதி என்பதற்கு சாட்சியாக யாழ்.நல்லூரில் காட்சியளிக்கும் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மகோற்சவ பெருவிழாவின் 7ஆம் நாள் இன்றாகும்.
இலங்கையின் வடக்கில் குடி கொண்டு வீற்றிருக்கும் அறுபடை வீடுடைய வள்ளி மணாளன் நல்லூர் முருகனின் மகோற்சவ பெருவிழாவானது கடந்த 21 ஒன்றாம் திகதி கொடியேற்றத்துடன் ஆடம்பமானது.
நல்லூர் முருகப்பெருமானின் மகோற்சவ தரிசனம் காண உள்நாட்டில் மட்டும் அல்லது வெளிநாட்டில் இருந்தும் ஆயிரமாயிரம் பக்தர்கள் வருடாவருடம் வருகைதட்டுவது வழக்கமாகும்.
அந்த வகையில் இன்றைய தினம் நல்லூரானுக்கு 7 ஆம் நாள் பூஜை இடம்பெறுகிறது. இன்றைய காலை பூஜையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மலர்மாலை பூஜையுடன் சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளது.
மேலும் முருகப்பெருமான் தங்க மயில் வாகனதிலும் வள்ளி தெய்வானை வெள்ளி அண்ண வாகனத்திலும் உள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.
அதன் பின் சிறப்பு பூஜைகளுடன் கந்தனுக்கு தோத்திர பாடல்கள் பாடி மேல வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
