யாழில் சிறப்புற நடைபெற்ற நல்லூரானின் திருக்கல்யாண உற்சவம் (Photos)
யாழ்ப்பாணம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்காரக் கந்தன் தேவஸ்தானத்தில் திருக்கல்யாண உற்சவ பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த உற்சவம் நேற்றையதினம் (19.11.2023) நடைபெற்றுள்ளது.
கந்தசஷ்டி விரதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அலங்காரக்கந்தன், வள்ளி, தெய்வானை சமேதராக மணவாளகோலத்துடன் உள்வீதி மற்றும் வெளிவீதியூடாக வந்து காட்சியளித்தார்.
திருக்கல்யாண உற்சவம்
கடந்த (14.11.2023) அன்று ஆரம்பித்த கந்தசஷ்டி உற்சவமானது சூரசம்ஹாரத்துடன் இனிதே நிறைவுற்ற நிலையில், நேற்று (19.11.2023) திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றுள்ளது.
இவ் உற்சவகிரியைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வைகுந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்துள்ளனர்..
திருக்கல்யாண உற்சவத்தில் பலபகுதிகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் இஷ்ட சித்திபெற்றுச் சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா





நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
