நளின் பண்டார எம்.பிக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கொடுப்பனவு ஒன்று தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கொண்ட பொய்யான அறிக்கை குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தக்காரர்களுக்கு 380 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை இரட்டைப் கொடுப்பனவாக (Double Payment) வழங்கப்பட்டுள்ளதாக நளின் பண்டார தெரிவித்திருந்தார்.
எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை
இந்த அறிக்கை முற்றிலும் அபாண்டமான பொய் என தெரிவித்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதற்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறி அதனுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையை தொடர்புபடுத்த எடுக்கும் எந்தவொரு முயற்சியும் மக்களை திசைதிருப்பும் பொறுப்பற்ற மற்றும் அடிப்படை ஆதாரமற்ற செயலாகும் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 7 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri