அரசியல் கட்சிகளின் மே தின நிகழ்வுகள்.. தீவிரமாக முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகள்
சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதியை முன்னிட்டு நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் பல கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் மே தினப் பேரணிகளை நடத்துவதற்கு தற்போது ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
அதன்படி ஆளும் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ‘நாட்டுக்கு மக்கள் சக்தி’ என்ற தொனிப் பொருளில் நாடு முழுவதும் மாவட்ட ரீதியாக மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பிரதான இரண்டு பேரணிகள் நுவரெலியா மற்றும் மஹரகம ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்துள்ளார்.
ஏனைய அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள்
• ஐக்கிய மக்கள் சக்தி : கட்சியின் மே தினப் பேரணி கொழும்பு மாளிகாவத்தை பீ.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
• ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி: கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் பிற்பகல் வேளையில் மே தினப் பேரணி நடைபெறவுள்ளது.

• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: நாட்டை முழுமையாக உள்ளடக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளது.
• முன்னிலை சோசலிசக் கட்சி: இம்முறை மே தினப் பேரணியை பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு ஹைட் மைதானத்தில் நடத்தவுள்ளது.
அதன் பேரணியானது மருதானை மாளிகாகந்தை வைட் மைதானத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. "ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு அடிபணியும் அரசாங்கத்திற்கு எதிராக உழைக்கும் மக்களின் சக்தி" என்பதே இவர்களது மே தின தொனிப் பொருளாகும்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri