இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்
இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடையை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
50 லட்சம் ரூபா முறைகேடு தொடர்பில், பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான நாலக கொடஹேவா மற்றும் இருவர் மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.இந்த வழக்கின் போதே முன்னர் அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டது.
இன்று மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரனராஜா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரின் பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டடுள்ளதுடன், இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 31 அன்று திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் 2013 ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 18 வரை இந்த குற்றத்தை செய்ததாக சட்டமா அதிபர் மேலும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
