நம்பிக்கையில்லாப் பிரேரணையை கேலிக்கூத்தாக மாற்றிய எதிர்க்கட்சி! நளிந்த ஜயதிஸ்ஸ சாடல்
இலங்கையில் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
இந்நிலையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என்று எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, "முதலில் பிரதமருக்கு எதிரான பிரேரணையை எதிரணியினர் முன்வைக்கட்டும். கையொப்பம் திரட்டி நாடகம் ஆடுவதுடன் நின்றுவிடாது நடவடிக்கையில் இறங்க வேண்டும்." - என்றார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் கையளிக்கப்படும் என எதிரணி கூறினாலும், கால எல்லை பற்றி கருத்துக் கூற மறுத்து வருகின்றது.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam