பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான நகுலேஸ் பிணையில் விடுதலை

Shanakiyan Rasamanickam Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By P.sasikaran Jan 23, 2024 10:43 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த (2023.11.25) ஆம் திகதி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பினை மேற்கொண்டதன் பேரில் இவர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து இன்றைய தினம்(23.01.2024) நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம்

இதன்போது நகுலேஸ் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் முன்னாள் போராளிகள் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது இன்னும் இயலாத ஒரு விடயமாகவே இருக்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான நகுலேஸ் பிணையில் விடுதலை | Nakules Released On Bail

யுத்தத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் இனவாத அரசியலில் இருந்து மற்றைய இனத்தினை அடிமைப்படுத்தும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைக் கொண்டு அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடந்து தான் செய்கின்றன.

எது எவ்வாறு இருந்தாலும் தமிழ் மக்களுக்கான எமது பணிகளை ஒருபோதும் தடுத்துவிட முடியாது.

நான் சிறையில் இருக்கும் போது என்னை வந்து பார்வையிட்டு எனது விடுதலைக்கான முயற்சிகளில் பெரிதும் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட என்னைப் பல தடவைகள் சிறைச்சாலைக்கு வந்து பார்வையிட்ட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், ஜனநயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்ட நான் விடுதலை பெற வேண்டும் என எண்ணம் கொண்டு என் விடுதலைக்காக முன்நின்று செயற்பட்ட அரசியற் பிரமுகர்கள், போராளிகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான நகுலேஸ் பிணையில் விடுதலை | Nakules Released On Bail

இந்தக் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் என்னைப் போன்று எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகள் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர்.

அவர்கள் தொடர்பிலும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குறைந்தபட்சம் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை உரியவர்கள் கையாள வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார். 

கொழும்பில் CCTV கண்காணிப்பில் சிக்கிய சாரதிகள் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பில் CCTV கண்காணிப்பில் சிக்கிய சாரதிகள் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பில் தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

கொழும்பில் தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US