கொழும்பில் தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
பொரளை செர்பன்டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் கத்தரிக்கோலால் தாக்கியதில் அவரது தம்பி உயிரிழந்துள்ளார்.
பொரளை, செர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மது அருந்திய நிலையில் மூத்த சகோதரனுடன் வாக்குவாதம் முற்றியதில் சந்தேகநபரான மூத்த சகோதரர் கத்தரிக்கோலால் மற்ற நெஞ்சுப் பகுதியில் தாக்கியுள்ளார்.
சகோதரனுடன் வாக்குவாதம்
கத்திரிக்கோல் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவரும் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
59 வயதுடைய சந்தேகநபரின் சகோதரன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோலுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்..





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
