வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த கும்பாபிஷேக நிகழ்வானது இன்று (24.01.2024) அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
மஹா கும்பாபிஷேக நிகழ்வு
அத்துடன் பிரதான கும்பம் மற்றும் ஏனைய கும்பங்கள் குருமார்களால் உள் வீதி வெளி வீதியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பெரியளவிலான ட்ரோன் மூலம் ஆலயத்துக்கு பூக்கள் சொரியப்பட்டுள்ளன.
இந்த கும்பாபிசேஷக நிகழ்விற்கு யானை, குதிரை என்பன வரவழைக்கப்பட்டுள்ளதுடன் கும்பாபிசேஷகத்தை தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
















950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
