யாழ்.பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட அம்மன் சிலை விவகாரம்: நல்லை ஆதீன சுவாமிகள் முக்கிய கலந்துரையாடல்!
யாழ்.பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலை தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நாளைய தினம் (17.04.2023) மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன சுவாமிகள் தலைமையில் இடம்பெறும் இக்கலந்துரையாடலில் அனைத்து இந்து சமய அமைப்புகள், ஆலய அறங்காவலர்கள் சைவ அபிமானிகள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
தீவகத்தின் நுழைவாயிலான யாழ்ப்பாணச் சுற்று வட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ்.நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய கலந்துரையாடல்
இந்த மனு மீதான விசாரணை நாளை மறுதினம் (18.04.2023) யாழ்ப்பாண நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில், குறித்த அம்மன் சிலை தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று நாளைய தினம் (17.04.2023) மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
