தையிட்டி காணி பிரச்சினை தொடர்பில் நாகதீப விகாராதிபதி ஜனாதிபதியிடம் கூறிய விடயம்
இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுப்புக்கள் சாத்தியம் என்பதால் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக நாக தீப விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
நயினாதீவுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நாக தீப விகாராதிபதியை சந்தித்து, கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரை பிரச்சினை
தையிட்டி விகாரை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அந்த விகாரையை சுற்றியுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், காணி கையளிப்புக்கள் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே சாத்தியமாகும் எனவே உங்கள் காலத்திலேயே காணிகளை கையளியுங்கள் என ஜனாதிபதியிடம் கூறினேன் என தெரிவித்தார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan