டுபாய் இஷாராவின் உதவியாளர்கள் மூவர் அதிரடியாக கைது
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் முக்கிய கடத்தல்காரரான டுபாய் இஷாராவின் உதவியாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை செய்த மூன்று சந்தேகநபர்கள் இன்று (17) காலை கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து போதைப்பொருள் விநியோகம்
சந்தேகநபர்கள் கம்பளை, நாவலப்பிட்டி, உலபனை, டோலுவ, கெலிஓயா, பேராதனை மற்றும் வெலிகல்ல போன்ற பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் ஹெரோயினை விநியோகித்து வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளையின் டோலுவ பகுதியில் இரண்டு பேரும் கம்பளையின் மஹர பகுதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளையின் பகுதிகளில் வசிக்கும் இந்த சந்தேகநபர்களுக்கு கொழும்பிலிருந்து போதைப்பொருள் விநியோகிக்கப்படுகின்றமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri