மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட நாட்டார் வழக்காறுகள் நூல்
மட்டக்களப்பு (batticaloa) களுவாஞ்சிகுடி கிராமத்தை சேர்ந்த கலைச்சுடர் இலக்கிய வித்தகர் ஓய்வு நிலை அதிபர் நாராயணபிள்ளை நாகேந்திரன் எழுதிய நாட்டார் வழக்காறுகள் எனும் நூல் வெளியீட்டு விழா கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (24.04.2024) பிரதேச செலயக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழாவில் உதவிப் பிரதேச செயலாளர், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர், பாடசாலைகளின் அதிபர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |