நிலத்திற்கு கீழ் கேட்கும் மர்ம சத்தம்: வெளியிடப்பட்டுள்ள காரணம்
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை ஹெதுனுவெவ பிரதேசத்தில் நிலத்தடியில் இருந்து மக்கள் கேட்கும் அசாதாரண ஒலிக்கு, நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணமாக இருக்கலாம் என புவியியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ புவி வள பொறியியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலங்கை புவியியல் நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறி இதனை தெரிவித்துள்ளார்.
நிலத்தில் உறுதியற்ற தன்மை
தரையில் இருந்து இத்தகைய இரைச்சல் ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்களை பட்டியலிட்ட பேராசிரியர் பிரேமசிறி, நிலத்தடி பாறைகளின் முறிவு அல்லது நிலத்தில் சில ஆற்றலை வெளியிடும் வேறு ஏதேனும் காரணத்தால் இது ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், நிலத்தடி நீரில் உருவாகும் அழுத்தத்தால் இது தூண்டப்பட்டு, புவியியல் ரீதியாக பலவீனமான மண்டலங்கள் வழியாக வெளியிடப்பட்டு, நிலத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் மிகவும் சாத்தியமான காரணம், நிலத்தடி நீரில் ஏற்பட்ட அழுத்தமாக இருக்கலாம், ஏனெனில் இது கடுமையான மழைக்காலங்களில் நிகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தடி நீர் திடீரென குறைதல் போன்ற அசாதாரண நிகழ்வுகளை மக்கள் அவதானித்துள்ளனர்.
இதனை, நிறுவ புவியியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பூமியில் உள்ள புவியியல் ரீதியாக பலவீனமான மண்டலங்களில் நிலத்தடி முறிவுகள் மற்றும் துவாரங்கள் காரணமாக இத்தகைய நிலை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மக்களை இடமாற்றம் செய்தல், கண்காணித்தல் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுதல் போன்ற மென்மையான பொறியியல் முறைகள், சாத்தியமான சேதங்களைக் குறைக்கும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
