யாழில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களிடம் மர்மநபர்கள் அத்துமீறல்!
யாழ்ப்பாணத்தில் (Jaffna) க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மர்ம நபர்கள் பலவந்தமாகத் திணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்முறைக் குழுக்களில் உள்ளவர்களைப் போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள், மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும் நடந்து கொண்டமை அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
விசாரணை
இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு பெற்றோராலும், சமூக நலன்விரும்பிகளாலும் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பிரதேச செயலகங்களின் உரிய அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
