பொலிஸாரை தாக்கி தப்பி செல்ல முற்பட்ட மர்ம நபர்கள் கைது
முல்லைத்தீவு - புதுக்கடியிருப்பு பரந்தன் வீதியில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு பொலிஸாரை தாக்கிச்சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று (15) இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று மாலை புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கைவேலிப்பகுதியில் ஒரு உந்துருளியில் இருவர் சாகசம் காட்ட முற்பட்டதோடு அப்பகுதியில் பயணித்த ஒருவர் மீது விபத்தினை ஏற்படுத்திவிட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தினை கடமையில் இருந்த பொலிஸார் பார்வையிட சென்று பார்த்த போது பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச்சென்ற நிலையில்,சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரை காயப்படுத்திவிட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உந்துருளி சாகசம் காட்டி விபத்தில் காயமடைந்த ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்தியவர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
