வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த மர்ம பொதியால் அதிர்ச்சி
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றில் இருந்து பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட சுமார் 12 கிலோ குஷ் போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
84 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்

பேலியகொடையில் அமைந்துள்ள காகோ நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பப்பட்ட 2 மரப்பெட்டிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிராம் குஷ் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மரப்பெட்டிகளில் 24 பொதிகளில் குஷ் போதைப்பொருள் இருந்ததாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிக்க பொருட்களின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்துடன் ஒருவரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும், இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 84 மில்லியன் ரூபா எனவும் சுங்கம் தெரிவித்துள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan