அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் பர்டூ பல்கலையில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர் காணாமல் போனதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீல் ஆச்சார்யா என்ற இந்தியாவைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலையில் கணினி அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் கற்கைநெறியை தொடர்ந்து வந்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட முறைப்பாடு
இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என தாயார் சமூக வலைதளத்தில் முறைப்பாடு செய்து பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், நீல் ஆச்சார்யாவை கண்டுபிடிக்க பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் உள்ளோம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அலிசான் சாலை லபாய்ட் பகுதியில் நீல் ஆச்சார்யா உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இதனை கணினி அறிவியல் துறைத்தலைவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |