ஈபிள் கோபுரம் மீது ஏறிய மர்ம நபர் : பாதிக்கப்பட்ட ஒலிம்பிக் நிறைவு விழா பணிகள்
பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன் நபர் ஒருவர் ஈபிள் கோபுரத்தின் மீது ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் ஈபிள் கோபுரத்தை ஏறிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவிய காணொளிகளில் அந்த நபர் 330 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தை எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் ஏறிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
இறுதிக்கட்ட ஏற்பாடுகள்
இதனால் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு, குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பிறகு அந்த நபரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
Someone is climbing up the Eiffel Tower right now! pic.twitter.com/prpdDIeEN8
— Matt Wallace (@MattWallace888) August 11, 2024
ஈபிள் கோபுரத்தின் மீது ஏறிய நபரின் நோக்கம் இன்னும் தெரியவராத நிலையில், அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் பாதிக்கப்பட்ட போதிலும் நிறைவு விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan
Bigg Boss: அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு... குற்ற உணர்ச்சியில் காலில் விழுந்த கம்ருதின் Manithan
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam