இலங்கையின் பொலிஸ் மா அதிபர்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் : பின்னணி என்ன...!
இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
கடந்த ஆட்சியாளர்களின் கீழ் பணியாற்றிய மூன்று பொலிஸ் மா அதிபர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் நீதித்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
அதற்கமைய முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, சி.டி. விக்கிரமரத்ன, தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடுத்தடுத்து பொறிக்குள் சிக்கியுள்ளனர்.
மரண தண்டனை
34ஆவது பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தரவிற்கு நேற்றையதினம் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றத்திற்காக பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
35 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சி.டி. விக்கிரமரத்ன கடந்த வாரம் அவரின் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
தனது மெய்பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோட்டாபய ஆட்சிக்காலத்தில் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு ராஜபக்சர்களுக்கு விசுவசமாக செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
கடும் அழுத்தம்
அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், மூன்றாம் தரப்பினால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தம் காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

36ஆவது பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு வலுகட்டாயமாக அவரின் பதறி பறிக்கப்பட்டது.
நாடாளுமன்றக் குழுவின் விசாரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ராஜபக்சக்களின் ஆட்சியின் போது போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இவர் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர அடிப்படையில் நல்ல மனிதர் என்ற போதிலும், ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக செயற்பட்டு இன்று சிறைக் கைதியாக மாறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொம்மைகளாக செயற்பட்டவர்கள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளனர். எனினும் பொம்மைகளை ஆட்டுவித்த வித்தைக்காரர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள் என நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri