மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதித்த மியன்மார்
மியான்மரின் ஜுண்டா அரசாங்கம் அதன் மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லௌகாய் நகரின் தளபதி உட்பட மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவ ஆதாரத்தை மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவ ஆட்சிக்குழுவின் முடிவு
குறித்த பிரிகேடியர்கள் கடந்த மாதம் சீன எல்லையில் உள்ள ஒரு முக்கியமான மூலோபாய நகரத்தை கிளர்ச்சிக் குழுக்களிடம் இழந்ததோடு அவர்கள் மூவரும் நூற்றுக்கணக்கான வீரர்களுடன் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், மியன்மார் இராணுவ அரசு மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும், சரணடைதலுக்குப் பிறகு, இராணுவ ஆட்சிக்குழு பல விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததோடு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இராணுவ ஆட்சிக்குழு முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri