இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ஜூலி சங்
இலங்கையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கடுமையான அதிருப்பையை தெரிவித்துள்ளார்.
குறைபாடுள்ள செயல்முறை, உள்நோக்கம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்க விளைவு என்பன இந்த சட்டத்தின் மூன்று முக்கியப் பகுதிகளாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத் தீங்குகள்
இந்த வரைவு செயல்பாட்டின் போது விரிவான பங்குபற்றுனர் தலையீடுகள் இல்லாததை அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, பலர் அதனை "ஆழமான குறைபாடுடன்" பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
தவறான படங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற இணையத் தீங்குகளை எதிர்த்துப் போராடும் நோக்கம் கொண்டதாக கூறப்படும் இந்த யோசனையில், பயன்படுத்தப்படும் பரந்த வரையறைகள் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது அமெரிக்கா அல்லது சர்வதேச சமூகத்தின் குரல்களைப் பற்றியது மட்டுமல்ல, இலங்கை குடிமக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிவில் சமூகத்தினர், சட்டத்தரணிகள், தனியார் துறையினர், மக்கள், குழுக்கள்,ஊடகவியலாளர் குழுவினர் அனைவரும் இந்த சட்டமூலம் குறித்து தங்கள் அதிருப்திகளை எழுப்பியுள்ளனர்.
இந்தநிலையில் சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளை மாத்திரம் அன்றி, தனது சொந்த பிரஜைகளின் பிரச்சினைகளுக்கு செவிசாய்ப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |