முல்லைத்தீவு கடலில் தத்தளித்த மியன்மார் அகதிகளுக்கு உதவியவர்களை பாராட்டிய அருட்தந்தை மா.சத்திவேல்
மியன்மார்(Myanmar) அகதிகள் முல்லைத்தீவு கடலில் தத்தளித்த போது யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சங்கமும் பொதுமக்களும் அடிப்படைத் தேவைகளை செய்தமை வரவேற்கத்தக்கது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (24.12.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பௌத்த பெரும்பான்மை
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாமும் எல்லா கொடுமைகளையும் அனுபவித்து இனப்படுகொலை, யுத்த குற்றங்கள், இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றோடு பலவந்தமாக படையினால் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க கோரியும் கடந்த 15 ஆண்டுகளாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம்.
நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு எந்த சர்வதேச அமைப்புக்களாலும் இதுவரை இயலாமல் உள்ளது.
இன்று மாற்றம் என நாட்டை வழி நடத்தும் தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கம் நம்பிக்கை தரும் செயற்பாடுகளில் இதுவரை இறங்கவில்லை. இதுவே சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆதிக்க மனநிலையுமாகும்.
மியன்மார் அகதிகள்
இத்தகைய மனநிலை கொண்ட ஆட்சியாளர்களிடம் உயிர் பாதுகாப்பு கோரி மியன்மார் அகதிகள் முல்லைத்தீவு கடலில் தத்தளித்த போது யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சங்கமும் பொதுமக்களும் அவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை செய்து செய்தமை வரவேற்கத்தக்கது.
இதுவே இயேசு வாழ்வாகும். இயேசு பிறப்பு விழா வாழ்வுமாகும். அன்று சமயமும் அரசியலும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கட்டமைப்புகளும் அவர்கள் உருவாக்கிய சட்டங்களும் வாழ்வு கலாச்சாரமும் அடிமட்ட ஏழை மக்களின் வாழ்க்கையை பறித்து சீரழித்துக் கொண்டிருக்கையில் அவற்றுக்கு எதிரான கடவுளின் தலையீடாகவே இயேசு பிறப்பு நிகழ்ந்தது.
இயைசுவும் தம் வாழ்நாள் முழுவதும் அடக்கி ஒடுக்கப்பட்டு குரலற்றவர்களாக வாழ்ந்தவர்களின் பக்கம் நின்று நீதி குரலை உயர்த்தினார். அத்தகைய நீதிகுரல் வாழ்வு மைய சமூக இயக்கத்தை உருவாக்க செயற்பட்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
