முத்துராஜவல பிரதேசத்தை கொாிய நிறுவனத்துக்கு விற்க முயற்சி- தடுக்கப்போவதாக மக்கள் சக்தி எச்சாிக்கை
பாதுகாக்கப்பட்ட முத்துராஜவல பிரதேசத்தை அபிவிருத்தி செய்யப்போவதாக அரசாங்கம் வா்த்தமானியை வெளியிட்டுள்ள நிலையில் அதில் 500 ஏக்கரை, கொாியாவின் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்படுவதாக மக்கள் சக்தி அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதன் மூலம் மீனவக் குடும்பங்கள், அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்படும் என்று மக்கள் சக்தி அமைப்பு இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளா் சந்திப்பில் தொிவித்துள்ளது.
அரசாங்கம் இந்த நாட்டின் பொறுப்பாளர் மாத்திரமே. சொந்தக்காரா் அல்லர் என்று இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் டொலர் பற்றாக்குறையை தவிர்க்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சொத்தை 6 பில்லியன் டொலா்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அதனை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் அளிக்க முயற்சிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இந்த வா்த்தமானியை ரத்துச்செய்யவேண்டும் என்று மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்
இந்த பிரதேசம் விற்பனை செய்யப்படுமானால், முழு கொழும்பும் பாதிக்கப்படும் என்றும் அவா்கள் எச்சாிக்கை விடுத்தனர்.