சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்து காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்(Video)

Srilanka Prisons Douglas Devananda Gotapaya Rajapaksa
By Kanamirtha Jan 19, 2022 03:00 PM GMT
Report

தமிழ் மக்களுக்கான சுபிட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை தொடர்பாக இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

'ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த ஆண்டிற்கான ஆரம்ப உரை நாட்டு மக்களுக்கு ஒளி வீசும் நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத்தீவு கோவிட்- 19 காரணமாக எதிர்கொள்ளும் சவால்களை யதார்த்தமாகத் தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார்.


சக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதும், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேவைகள் தொடரும் என்ற அவரது பெருந்தன்மை மிக்க கூற்றுகளும் அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பறைசாற்றி நிற்கிறது.

ஜனாதிபதி தனது உரையில், இனவாதத்தை நிராகரிக்கின்றோம் என்றும் நாட்டில் வாழும் சகல பிரஜைகளும் கௌரவத்துடன் வாழ்வதற்கும், அவர்களது அனைத்து உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் திறந்த மனத்துடன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து சக தமிழ் கட்சித் தலைமைகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அரசியல் தீர்வு குறித்து நம்பிக்கையோடு செயலாற்ற முன்வர வேண்டும். அது மட்டுமன்றி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் நாம் உரிமையோடும் தேசிய நல்லிணக்க ஒழுங்கு முறையிலும் முன்வைத்த விடயங்கள் குறித்தும் தனது உரையில் தெரிவித்துள்ளமை எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது.

காணாமல் போனோருக்கு நீதியும் பரிகாரமும் வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார். சிறையில் வாடும் கைதிகளை விடுவித்து வருவது குறித்துப் பேசியுள்ளார். அது மட்டுமன்றி யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது, படையினரின் பயன்பாட்டிலிருந்த 90 வீதமான நிலங்களை விடுவிப்பதற்குத் தான் முயற்சி எடுத்தமை குறித்துப் பேசியுள்ளார்.

இதில் எனது பங்கோடு பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்களை அவர் விடுவித்துத் தந்திருக்கிறார் என்பதை நான் கூறி வைக்க விரும்புகிறேன். இன்னமும் விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிப்பதாகவும் அவர் தனது உரையில் உறுதியளித்துள்ளார்.

அனைத்து மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி சர்வதேச சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகள் குறித்தும் நியமன முடிவுகளை எடுப்போம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளைத் தனது உரையில் யதார்த்தபூர்வமாகத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளைத் தற்காலிகமாகத் தவிர்த்து விட்டு, தான் எடுக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்டுள்ளார்.

உரையை முழுமையாகப் படித்து முடித்தார்களோ, அல்லது செவி மடுத்தார்களோ தெரியாது. அதில் ஒன்றும் இல்லை என்றும், குப்பை என்றும் வழமை போல் கூச்சலிடத்தொடங்கி விட்டார்கள். 13வது திருத்தச் சட்டத்தை துப்புத்தடியால் கூட தொட்டும் பார்க்க மாட்டோம் என்று நிராகரித்து விட்டு, இன்று சுடலை ஞானத்தில் அதையே தூசி தட்டி இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்தவர்கள் இன்னும் பல ஆண்டுகள் கழித்து ஜனாதிபதியின் இன்றைய கொள்கை பிரகடனங்களையும் தூசு தட்டிப் பார்க்கக்கூடும்.

அரசியல் வேறுபாடுகளை ஒரு புறம் வைத்து விட்டு வாருங்கள் முன்னோக்கிச் செல்வோம் என்றுதான் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். கொள்கையை ஒருபுறம் வைத்து விட்டு வாருங்கள் என்று கேட்டதாக அந்த உரையைத் திரிபு படுத்திக் கூச்சலிடுவோர்களிடம் கேட்கிறேன்.

முண்டாட்சியில் உங்கள் கொள்கையை விற்று யாரிடம் எதைப் பெற்றீர்கள்? மக்களிடம் இருந்து நீங்கள் அபகரித்த ஆணைக்கு என்ன மதிப்பளித்தீர்கள்? இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையும் ஞானசூனியங்களாக இருப்பதில் அர்த்தமில்லை;. கண்மூடித்தனமாகச் சுயலாப அரசியல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என கேட்கிறேன்.

எள்ளைக் கொடுத்தால் எண்ணைதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் அரசியல் சுயலாபங்களே தமிழ் மக்கள் மீது அவலங்களையும் அழிவுகளையும் சுமத்தியிருக்கிறது. சும்மா இருக்கச் சுதந்திரம் வந்து சேராது, சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக்காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதியின் உரையின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு தமிழ் பேசும் மக்களின் வாழ்விலும் சுபிட்சமான ஒளி வீசும் காலத்தை உருவாக்க அனைத்து வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராக வேண்டும் என நான் பகிரங்க அழைப்பு விடுக்கிறேன்”என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US