வவுனியாவில் உள்ள முஸ்லிம் மக்களை போராட்டத்திற்கு அணிதிரளுமாறு மக்கள் காங்கிரஸ் அழைப்பு
இன்றைய தினம் வவுனியாவை வந்தடையவுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு வவுனியா முஸ்லிம்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும், தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு தமது பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறு வவுனியா மாவட்டத்தில் வசித்துவரும் அனைத்து முஸ்லிம் மக்களிடமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கின்றது.
தமிழ் பேசும் சமூகம் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகமும் இந்த அரசின் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இனம் என்றவகையிலும். தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராடத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம், இன்று மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே குறித்த நேரத்தில் வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தினசந்தைக்கு முன்பாக அனைத்து முஸ்லிம் உறவுகளும் ஒன்று கூடுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி மற்றும் முகமதுலறீப் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam