அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் முடிவு
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் எம்.பி ஹாரிஸுக்கு வேட்புமனு வழங்கக்கூடாதென்று பல வேட்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் எற்பட்டுள்ளதாக உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இறுதி முடிவை எடுப்பதற்காக கட்சியின் தலைவர் ஹக்கீமும் - முன்னாள் எம்.பி ஹாரிஸும் தற்போது நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறையில் தனித்து போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ்
இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்தே தேர்தலை சந்திக்கவுள்ளது.
எனினும், அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் மட்டும் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |