'OPEN AI' பக்கம் திரும்பியுள்ள எலான் மஸ்க்கின் பார்வை
'OPEN AI' நிறுவனத்தை 97.4 பில்லியன் டொலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க்(Elon Musk) மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி நடத்திக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் பார்வை தற்போது 'OPEN AI' நிறுவனத்தின் மீது விழுந்துள்ளது.
AI சேவை
'OPEN AI' நிறுவனம் சாட்ஜிபிடி உள்ளிட்ட AI சேவைகளை வழங்கி வருகின்றது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சேம் ஒல்ட்மேன்(Sam Altman) உள்ளதுடன் 2015இல் 'OPEN AI' நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர் ஆவார்.
ஆனால் 2018இல் கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார்.
எலான் மஸ்க்
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், 'OPEN AI' நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
no thank you but we will buy twitter for $9.74 billion if you want
— Sam Altman (@sama) February 10, 2025
'OPEN AI' நிறுவனத்தை 97.4 பில்லியன் டொலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு நேற்றையதினம்(10) அந்த நிறுவனத்திடம் முன்மொழிவு செய்துள்ளது.
ஆனால் இதற்கு சேம் ஒல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சேம் ஒல்ட்மேன்,
"வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டொலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)