டெஸ்லாவில் இருந்து விலகுகின்றாரா எலான் மஸ்க்! வெளியாகும் தகவல்கள்..
1 ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவில்லை எனின் டெஸ்லாவில் இருந்து எலான் மஸ்க் வெளியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் spaceX, X, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருந்து வருகின்றார்.
1 ட்ரில்லியன் டொலர்
சமீபத்திய காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் லாபம் கணிசமாக குறைந்ததுள்ள நிலையில் விற்பனையை அதிகரிக்கும் முடிவில் டெஸ்லா நிறுவனம் உள்ளது.

அதற்கு எலான் மஸ்க்கை மேலும் 10 ஆண்டுகளுக்கு தலைமை பொறுப்பில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அவருக்கு 1 ட்ரில்லியன் சம்பளம் வழங்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எலான் மஸ்க்கிற்கு டெஸ்லா 1 ட்ரில்லியன் டொலர் சம்பளம் வழங்கும் திட்டத்திற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவர் தலைமை பொறுப்பில் இருந்து விலகக்கூடும் என டெஸ்லா தலைவர் ராபின் டென்ஹோம், டெஸ்லா பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊதியத் திட்டம் நிராகரிக்கப்பட்டால், அது டெஸ்லாவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று எலான் மஸ்க் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், என்னை எளிதில் நீக்க முடியாதபடி, டெஸ்லாவில் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு போதுமான வாக்கு உரிமை எனக்கு வேண்டுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.