ஈழத்தமிழ் சினிமாவில் முதன்முதலாக தடம் பதிக்கும் இசைஞானி இளையராஜா
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் T.J.பானு ஆகியோர் இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற ஈழத்தமிழ் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார்.
இத்திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர்.
உலகத்தமிழ் மக்கள் அனைவரிடமும்
போருக்கு பின்னரான ஈழமண்ணில் காதல், பாசம், நட்பு முதலியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடிகர் அருள்தாஸ், நிழல்கள் ரவி மற்றும் இலங்கையை சேர்ந்த கதாநாயகன் சுதர்சன் ரவீந்திரன், கதாநாயகி செளமி முனசிங்க, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், இதயராஜ், யசிதரன், தர்ஷிபிரியா, ஷாமிலா, சாந்தா, சர்மிளா, வசந்த சீலன் போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்.
சித்தா படத்தின் படத்தொகுப்பாளர் சுரேஷ் A.பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.
இத்திரைப்படம் உலகத்தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan