தாமரை கோபுரத்திற்கு அருகில் நடைபெறவுள்ள இசை விழா: எழுந்துள்ள எதிர்ப்பு
அண்மையில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட தாமரை கோபுரத்திற்கு அருகில் நாளையதினம் இசை விழா ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த இசை விழாவிற்கு "ஹெல்ஃபயர்"(hellfire) என்ற பெயர் பயன்படுத்தப்படுவதற்கு கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு கொழும்பு மாநகர சபை அனுமதி வழங்கியுள்ள போதிலும் "ஹெல்ஃபயர்" என்ற பெயரைக் காட்சிப்படுத்த வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
எனவே அந்த நிகழ்வின் பெயரை மாற்றுமாறு அவர் ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தியுள்ளார்.
நரக நெருப்பு கச்சேரி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ தமது நகரத்தில், ஒரு நரக நெருப்பு கச்சேரியை தாம் பார்க்க விரும்பவில்லை எனவும் இந்த பெயருக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இசை விழா சாத்தானை ஊக்குவிக்கும் முயற்சி அல்ல.
இசை நிகழ்வின் நோக்கத்தில் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இந்தநிலையில் நிகழ்வில் "ஹெல்ஃபயர்" என்ற பெயர் விளம்பரப்படுத்தப்படக் கூடாது
என்ற நிபந்தனையின் பேரிலேயே அதனை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
