இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம் : இசை நிகழ்ச்சியில் மாற்றம்
புதிய இணைப்பு
கொழும்பில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) ஆகிய தினங்களில் இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்றையதினம்(26) உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் மாலை திடீரென உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
சோகத்தை ஏற்படுத்திய மரணம்
இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது கொழும்பு நோக்கி வருகைத் தரவுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
இதேவேளை, வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் இசைஞானி இளையராஜாவி இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், திடீரென ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் காரணமாக நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன், யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த பவதாரணியின் மரணத்தினால் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

உலகுக்கு விடை கொடுத்த ராஜா வீட்டுக் குயில் : இலங்கை வைத்தியசாலையில் பிரிந்த உயிர் - சோகத்தில் இரசிகர்கள்
முதலாம் இணைப்பு
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த இசை குழுவினர் நேற்றையதினம் (24.01.2024) மாலை இலங்கையை வந்தடைந்தனர்.
கொழும்பில் இன்று(25.01.2024) இடம்பெறவுள்ள இசை நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே இளையராஜா தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இசை நிகழ்வு
இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா, ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,''நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன்.எங்கு சென்றாலும் என்னிசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது.
இலங்கை தமிழர்களில் எனக்கு இரசிகரில்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் எனக்கு இரசிகர்கள் தானே.அதுவே எனக்கு போதும்.இது கடவுள் கொடுத்த வரம்.'' என கூறியுள்ளார்.








புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 30 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
