காதலனால் காதலிக்கு ஏற்பட்ட கொடூரம்: கண்டியில் சோகம்
தன்னுடைய காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன் தப்பியோடியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04.05.2023) கண்டி - பல்லேகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவம் பல்லேகல பொலிஸ் பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கிய சம்பவம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் சிக்கியுள்ள இக்கட்டான நிலைமையில் படுகொலைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.
குடும்பத் தகராறு, தனிப்பட்ட தகராறு, காதல் விவகாரம், போதைப்பொருள் விற்பனைப் போட்டி மற்றும் கோஷ்டி மோதல்களால் மேற்படி படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் படுகொலைகளில், நாட்டையே உலுக்கிய சம்பவமாக யாழ்.நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை சம்பவம் பதிவாகியுள்ளது.
