இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சீன பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணை
கடந்த 23ஆம் திகதி கொஹுவல, கென்ட் ரெசிடென்ஸ் (Kent Residence) குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த சீன நாட்டுப் பெண் ஒருவர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் முன்னாள் காதலரான சீன நாட்டவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபரின் விபரங்கள்
பெயர்: WANG HUIYIN
பிறந்த திகதி: 2000.06.01
கடவுச்சீட்டு இலக்கங்கள்: EE6791329 / ER3805969
சந்தேகநபரின் இடது கையின் விரல்களில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தொலைபேசி இலக்கங்கள் பொறுப்பதிகாரி (கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு): 071 – 8596408 பொறுப்பதிகாரி (கொஹுவல பொலிஸ் நிலையம்) : 071 - 8591669